Tuesday, November 29, 2011

25.12.2013 வெண்மணி



தேசமெங்கும்
தீண்டாமைத்தீயில்
வெந்து மடிந்த
விட்டில்பூச்சிகளை
நினைவு கொள்கிறோம் !
**
நிழலை நம்பி
நிஜத்தைப்பலியிடுவோர்
நிறைந்த தேசம் !
**
பன்றிகளும் பசுவும்
தெய்வமாயிருக்க
மனிதனை ஒதுக்கும்
மடமைமிகு தேசம் -இந்த
மா... பெரும் தேசம் !
**
வேற்றுமையில்
ஒற்றுமை என
வேடிக்கை காட்டும்
விலங்குகளின் சரணாலயம் !
**l
முளைவிடும் விதைகளை
மரங்களே அழித்திடும்
வினோத வனம் !
**
இங்கே
சிங்கங்கள்கூட
சிநேகமாய் இருக்க.....
குரங்குகளின் உறுமலும்
குள்ளநரிகளின் ஊளையும்
குறைந்தபாடில்லை இன்னும் !
**
காலனிக்காரனுக்கு
காலணியாய கிடந்த
காலணிகள் -இன்று
சிரசு தேடுகின்றன மகுடமாகிட!
                                       தலை குனிந்தது போதும் .......
                                     
                                              ****

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. என்ன நிகழ்வு இது, சிவப்பு சட்டையின் பின்னணியில், வெள்ளைச் சட்டைகளின் கரகோஷம்,

    சுத்தியல் அரிவாளுக்கு பூ அலங்காரம். என்ன இது.
    மற்றபடி,

    //முளைவிடும் விதைகளை
    மரங்களே அழித்திடும்
    வினோத வானம்//

    அருமை வரிகள்

    ReplyDelete